ராமர் சிலை பிரதிஷ்டைக்காக 11 நாள் சிறப்பு பிரார்த்தனையைக் கடைப்பிடிக்கும் பிரதமர்!

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை – கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாள் சிறப்பு பிரார்த்தனை பயிற்சியைக் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா ஜன. 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ஹிந்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு 11 நாட்கள் சிறப்பு பிரார்த்தனை பயிற்சியைக் கடைபிடிக்க தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு இன்னும் 11 நாள்களே உள்ளன.

இந்த மங்களகரமான நிகழ்விற்கு நானும் சாட்சியாக இருப்பது எனது அதிர்ஷ்டம். ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்வின்போது அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக என்னைக் கடவுள் தேர்ந்தெடுத்துள்ளார்.

இதனை மனதில் வைத்து இந்த 11 நாட்களுக்கு சிறப்பு பிரார்த்தனை பயிற்சியை மேற்கொள்ள உள்ளேன். இந்த தருணத்தில் எனது உணர்வுகளை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.