தஞ்சாவூரில் கடும் பனிப்பொழிவு

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

தஞ்சாவூரில் கடந்த வாரம் பலத்த மழை பெய்த நிலையில் சில நாள்களாக பகலில் மிதமான வெப்பமும், இரவில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. ஆனால் காலை 6 மணிக்கு பிறகு பனிப்பொழிவு குறைந்துவிடும்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக காலை 7 மணி கடந்தும் புகை மண்டலம் போல பனி படர்ந்து கிடந்தது.

இதனால், மாநகர மக்கள் சுமார் 50 மீட்டருக்கு அப்பால் எதுவும் தெரியாததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் கடும் குளிர் நிலவியதால் காலை நேரத்தில் வேலை செய்த பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மாநகரில் 10 மணியை கடந்தும் பனியின் தாக்கம் தொடர்ந்தது.

Leave A Reply

Your email address will not be published.