அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: இதுவரை 10 பேர் காயம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 10 பேர் காயமடைந்துள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை உறுதி மொழியுடன் துவங்கிய நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டிகளை துவங்கி வைத்தார்.

1200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ள நிலையில், 2 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.

இதில், மாடுபிடி வீரர்கள் 5 பேர், காவல்துறையினர் 2 பேர், ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர், மாட்டின் உரிமையாளர் ஒருவர், பார்வையாளர் ஒருவர் என மொத்தம் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதில், இருவர் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மூன்றாம் சுற்று தொடங்கிய நிலையில், மொத்தம் 10 சுற்றுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காயம் படும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்காக மருத்துவத் துறை மற்றும் கால்நடை துறை சார்பாக சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. காயம்படும் வீரர்களை மற்றும் காளைகளை மீட்க இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் இதற்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.