மொட்டு ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் ஜனாதிபதி ரணில் பெயரும் உள்ளது – நாமல்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் பட்டியலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளடங்குவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இன்னும் ஜனாதிபதியாக இருப்பதால் அவரின் பெயரும் அந்த பட்டியலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த பட்டியலில் மேலும் பல பெயர்கள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.