சஜித், நாட்டின் உண்மையான நிலைமையை IMF பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தார் (Video)

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (18) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியாக Mr Peter Breuer (Senior Mission Chief), Ms Sarwat Jahan (Resident Representative), Manavee Abeyawickrama (Local Economist) ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம், தற்போதைய அரசாங்கம் VAT உட்பட பல வகை வரிகளை சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகள் எனக் கூறி அதீதமாக அதிகரித்து மக்களுக்கு பாரிய வரிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், நடுத்தர வர்க்கம், அரச ஊழியர்கள் என பல துறைகளைச் சேர்ந்த மக்கள் அநாதரவாகிவிட்டனர் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதாரங்களுடன், உண்மைகள் மற்றும் தரவுகளுடன் சுட்டிக்காட்டினார்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒருதலைப்பட்ச ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து முக்கியமான, ஜனரஞ்சக ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி முறையான திட்டத்தையும் கொண்டுள்ளது. அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளினால் ஆதரவற்ற நிலையில் உள்ள மக்களையும், அந்த அவலநிலையில் இருந்து மக்களை விடுவித்து, நாட்டை தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கவும், பாதிக்கப்பட்டு ஆதரவற்ற மக்களை மீட்கவும், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து செயற்படுகிறது, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வந்தவுடன் செயற்படுவதற்கான முறையான திட்டம் உள்ளது எனவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அன்றைய சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, கபீர் ஹாசிம், சுஜீவ சேனசிங்க, கலாநிதி நாலக கொடஹேவா, எதிர்கட்சித் தலைவரின் செயலாளர் திசத் விஜேகுணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

– Madushanka

Leave A Reply

Your email address will not be published.