தென்னாபிரிக்க ஜனாதிபதி உட்பட அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ள பல்வேறு அரச தலைவர்களுடன் ரணில் சந்திப்பு.

உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேற்று (19) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தென்னாபிரிக்க ஜனாதிபதி மிகவும் அன்புடன் வரவேற்றதுடன் இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதேவேளை, தன்சானியா பிரதமர் காசிம் மஜலிவாவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இருதரப்பு பேச்சில் ஈடுபட்டார்.

மேலும், பஹமாஸ் பிரதமர் பிலிப் ஈ. டேவிஸ், எத்தியோப்பியா பிரதமர் அபே அஹமட், பெனின் குடியரசின் உப ஜனாதிபதி மாரியம் சாபி தலதா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், நிமல் பியதிஸ்ஸ, குமாரசிறி ரத்நாயக்க, உதயகாந்த குணதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் இந்தச் சந்திப்புக்களினபோது உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.