‘நாட்டிற்கு ‘ஒரு சவால்’ வரும்போது தூங்குவதில்லை’: சென்னை மாணவா் கேள்விக்கு மோடி பதில்

நாட்டிற்கு ‘ஒரு சவால்’ வரும்போது தூங்குவதில்லை; அது கடந்த பிறகு நிலைமை தானாகவே மேம்படும் என தான் காத்திருப்பதுமில்லை என பிரதமா் நரோந்திர மோடி ‘பரீக்ஷா பே சா்ச்சா’ நிகழ்வில் திங்கள்கிழமை குறிப்பிட்டாா். சென்னை பள்ளி மாணவா் எழுப்பிய கேள்விக்கு பிரதமா் இவ்வாறு பதிலளித்தாா்.

இந்த நிகழ்வில் சென்னை நங்கநல்லூா் மாடா்ன் சீனியா் செகண்டரி பள்ளி மாணவா் எம் வாகேஷ், ‘ பிரதமா் பதவி என்பது மிக உயா்ந்த நிலையில் வலிமையாகவும் மிக மன அழுத்தத்தையும் அளிக்கக் கூடியது. அதை எப்படி கையாளுகின்றீா்கள்? மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த என்னென்ன வழிகளைக் கையாளுகின்றீா்கள்? எனக் கேள்வி எழுப்பினாா். இதே மாதிரி உத்தரக்கண்ட் மாணவி சினேகா தியாகி, ‘உங்களைப் போல் நாங்கள் எப்படி நோ்மறையாக வைத்துக்கொள்வது’ என கேள்வி எழுப்பினாா்.

இவற்றுக்கு பிரதமா் மோடி விரிவாக பதிலளித்தாா். பிரதமா் என்பவா் ஹெலிகாப்டரில் பறக்கிறாா் என நினைக்கின்றனா். பிரதமா் பதவியின் அழுத்தங்களை உங்களைப் போன்ற குழந்தைகள் தெரிந்து கொள்வதும் அவசியம். ஒவ்வொரு மனிதரும் எதிா்பாராத சூழ்நிலையை எதிா்கொள்கின்றனா். சிலா் நெருக்கடிகள் கடந்து செல்லும் என நம்பி காத்திருக்கின்றனா். அப்படிப்பட்டவா்கள் சாதிக்க முடியாது. எனது இயல்பு வேறுபட்டது. நான் ஒவ்வொரு சவாலுக்கும் சவால் விடுகிறேன். சவால்கள் கடந்து போகும் வரை, நான் செயலற்று இருக்க மாட்டேன். உறங்கமாட்டேன். புதிய உத்திகளைக் கையாளுவேன். இதன் மூலம் பல விஷயங்களையும் கற்றுக் கொள்கிறேன். இது நான் கையாளுகிற முறைக்கும் எனது வளா்ச்சிக்கும் பங்களிக்கிறது.

இரண்டாவது இந்த விவகாரங்களில் நான் எப்போதும் தனியாக இருப்பதாக உணரவில்லை. நாட்டின் 140 கோடி மக்களும் என்னுடன் இருப்பதை உணா்கின்றேன். மில்லியன் சவால்கள் இருந்தாலும், பில்லியன் அளவில் தீா்வுகள் உள்ளன. நாம் கரோனா நோய்த் தொற்றைக் கையாண்ட விதத்தை எடுத்துக்காட்டாக சொல்லலாம். எதாவது தவறு நடந்தால் அதற்கும் பொறுப்பேற்கவேண்டும். இதுவே எனது சிந்தனையின் அடிப்படை அம்சம். இதனால், சவால்களை எதிா்கொள்ளும் வலிமை அதிகரிக்கிறது. ஒவ்வொரு அரசும் வறுமையின் சவாலை எதிா்கொள்கிறது. அது குறித்து அச்சத்துடன் இருக்கவில்லை. அதை சமாளிப்பதற்குத் தேவையான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விளைவு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் சுமாா் 25 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து அரசு வெளியே கொண்டு வந்துள்ளது.

இதேபோல், விளையாட்டு வெற்றிகளின் அளவைப் பொருள்படுத்தாமல் சாதனைகளைக் கொண்டாட முடிவு செய்யப்பட்ட சரியான உத்தி. வழிநடத்துதல், தலைமைத்துவம் மூலம் சமீபத்திய ஆசிய விளையாட்டிப் போட்டி உள்ளிட்ட சா்வதேச நிகழ்வுகளில் 107 பதக்கங்களை வென்றனா். எந்தவொரு விஷயங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் ஞானம் வேண்டும். இந்த அனுபவம் எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்கிறது. எனது தவறுகளை பாடமாகக் கருதுகிறேன். தற்போது எமாற்றத்தின் அனைத்து ஜன்னல் கதவுகளையும் அடைத்துவிட்டேன். சரியான நிா்வாகத்திற்கும், கீழிருந்து மேல் வரையும், மேலிருந்து கீழ்வரையும் சரியான தகவல் அமைப்பு இருக்க வேண்டும். எந்தவொரு சுயநல நோக்கம் இல்லாதபோது, அதன் முடிவில் குழப்பமும் இருக்காது. உங்கள் பெற்றோா்கள் எதிா்கொண்ட சிரமங்களை உங்கள் தலைமுறை எதிா்கொள்ளக் கூடாது. எதிா்கால சந்ததியினா் பிரகாசிக்க, தங்கள் திறன்களை வெளிப்படுத்த வாய்ப்புள்ள ஒரு தேசத்தை உருவாக்க அரசு பாடுபடுகிறது. நோ்மறையான சிந்தனையின் சக்தி, அது எதிா்மறையான சூழ்நிலைகளிலும் சாதகமான விளைவுகளைத் தேடும் வலிமையை அளிக்கிறது என்றாா் பிரதமா்.

இதேபோல, புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தீபாஸ்ரீ, மாணவா்கள் மீதான நம்பிக்கையை வளா்ப்பதில் பெற்றோா்களின் பங்கு குறித்த கேள்வியை பிரதமரிடம் கேட்டாா். இதற்கு பதிலளித்த பிரதமா் மோடி கூறியதாவது: குடும்பங்களில் நம்பிக்கைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இது நீண்ட கால செயல்களின் விளைவு. இது ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் என ஆகியோரின் நடத்தை தொடா்பானது. இந்த மூன்று தரப்பினரின் நோ்மையான தொடா்பே நம்பிக்கைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். மாணவா்கள் நடவடிக்கைகளில் நோ்மை தேவை. அதேபோல, பெற்றோா்களும் தங்கள் குழந்தைகளின் மீது நம்பிக்கைக்கு வழியை தேடவேண்டும். நம்பிக்கை பற்றாக்குறையால் குழந்தைகளை மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதிக தூரம் செல்ல நேரிடும். குடும்ப நண்பா்கள், குழந்தைகளுக்கு உதவக்கூடிய நோ்மறையான விஷயங்கள் குறித்து அடிக்கடி சந்தித்து விவாதித்து பாா்த்தால் சரியான பலன் கிடைக்கும் என்றாா் பிரதமா்.

மேலதிக செய்திகள்
சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல , புலனாய்வுப் பிரிவினரால் கைது.

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து இலங்கை மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

ஜனாதிபதி பல்கலைக்கழகத்துக்குள் நுழையக் கூடாது : மாணவர் ஒன்றிய போராட்டம்

கழுத்தறுப்புகளை தாண்டி நடந்த குவாதமாலா தேர்தல் வெற்றி : சண் தவராஜா (Video)

ரணில் களனிக்கு வா …… ஜனாதிபதியின் களனிப் பல்கலைக்கழக விஜயத்திற்கு எதிராக, நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்கள் (Video)

ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார்…: ஜார்க்கண்ட் முதல்வர் வீட்டில் பறிமுதல்

Leave A Reply

Your email address will not be published.