புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றும் குடியரசுத் தலைவர்!

நாடாளுமன்றத்தில் புதிய கட்டடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முதல்முறையாக இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றவுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று(ஜன. 31) காலை தொடங்கவுள்ளது. தற்போதைய 17-ஆவது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகும்.

அதேநேரம், நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவிருக்கிறாா்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அலுவல்கள் தொடங்கப்பட்ட நிலையில், முதல்முறையாக குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார்.

அவரது உரையில், கடந்த 10 ஆண்டு கால பாஜக அரசின் சாதனைகள் முன்வைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், நாளை காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

மேலதிக செய்திகள்

சாந்தன் இலங்கை வருவதற்கு உதவுங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தாயார் வேண்டுகோள்.

Leave A Reply

Your email address will not be published.