பொரளையில் துப்பாக்கிச் சூடு.

பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் சில நாட்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிகமாக வசிப்பவர் என்று கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்

துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

பாதிக்கப்பட்ட நபர் ஒரு பெரிய போதைப்பொருள் வியாபாரி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த நபர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த 5ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.