இந்தியன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் நிறைவு.

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் இந்தியன் 2.

இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் தயாராகி வரும் இந்தப் படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்தியன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் நிறைவு அடைந்தது கூறப்பட்ட நிலையில், இந்தியன் 2 படத்தின் பாடல் காட்சியை எடுக்க படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர்.

இப்படத்தின் பாடல் காட்சியை மிகவும் பிரமாண்டமாக எடுக்க ஷங்கர் முடிவு செய்து இருக்கிறாராம். இந்த பாடல் காட்சியில் நடிகர் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.