ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் ஆர். ஆர் (இராகவன்) காலமானார்!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான வேலாயுதம் நல்லநாதர்  @ R.R (இராகவன்) காலமானார்.

காலமாகும் போது அவருக்கு வயது 62.

அண்மையில் நோய்வாய்ப்பட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (22) மாலை காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.