விமான நிலைய ஊழியர் போராட்டம் காரணமாக ஸ்ரீலங்கன் விமானங்கள் தாமதம்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் இன்று (25) காலை ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக சுமார் 4 ஸ்ரீலங்கன் விமான பயணங்கள் தாமதமானதாக, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலைய ஊழியர்கள் , சில கடமைகளை செய்யாமல் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பமான போராட்டம் இரண்டரை மணித்தியாலங்கள் நீடித்த நிலையில் , அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் வினைத்திறனற்ற தன்மைக்கு உடனடி தீர்வை கோரி விமான நிலைய ஊழியர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.