ஹெரோயினுடன் பாடசாலை ஆசிரியர் கைது!

90 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த பாடசாலை ஆசிரியர் ஒருவரும் ஹெரோயினுடன் ஹலவத்தை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் – ஹலவத்தை வீதிக்கு அருகில் ஹலவத்தை வீதிக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று 27ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் தமிழ் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் உடப்புவ பிரிவு இலக்கம் 03 பகுதியில் வசிப்பவர் எனவும் சந்தேகத்திற்குரிய ஆசிரியரிடம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் ஹலவத்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.