பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் வரை 3 பில்லியன் டாலர் கடனை விடுவிக்கக் கூடாது.

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் வரை 3 பில்லியன் டாலர் கடனை விடுவிக்கக் கூடாது என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருந்து சர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராவல்பிண்டி சிறையில் இம்ரான் கானைச் சந்தித்த பின்னர், அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பிரதிநிதி அலி ஜாபர், ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, தேர்தல் ஊழல் தொடர்பாக சுதந்திரமான தணிக்கை நடத்துமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் தனது தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் நடைபெற்ற பெப்ரவரி 8 ஆம் திகதி இரவுக்குள் தோற்கடிக்கப்பட்ட பல வேட்பாளர்கள் மறுநாள் காலையிலேயே வெற்றி பெற்றமை ஆச்சரியமளிப்பதாகவும், இவ்வாறான தேர்தல் ஊழலினால் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. . எனவே, கடன் தொகையை விடுவிக்கும் முன் பாகிஸ்தானில் நடந்த தேர்தல் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்திடம் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.