மாரடைப்பு காரணமாக , நகைச்சுவை நடிகர் சேஷு மரணம்.

விஜய் டிவியில் 2004 முதல் 2007 வரை ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் சேஷூ. இதில் கலந்துகொண்ட இவர் லொள்ளு சபா சேஷு என பெயர் பெற்று வெள்ளித் திரையிலையும் காலடி எடுத்து வைத்தார். அப்பொழுது சந்தானம் தான் இவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து வந்தார்.

இதனை அடுத்து காமெடி கேரக்டரில் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் சந்தானத்துடன் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்தார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை வீட்டில் இருக்கும் பொழுது இவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.

அப்போது இவருடைய இதயத்தில் மூன்று அடைப்பு குழாய்கள் இருந்ததால் அதை தீவிர சிகிச்சை மூலம் அகற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி இவருடைய உயிர் பிரிந்து விட்டது. இவருடைய மறைவிற்கு திரையுலகினரும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். இவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம்.

Leave A Reply

Your email address will not be published.