கொரில்லா வேடத்தில் குரங்குக் கூட்டத்தை விரட்டியடிக்கும் ஊழியர்கள்

தெலுங்கானா மாநில விவசாயிகள் பயிரிட்டுள்ள பருத்தி, நெற்பயிர், பழங்கள், காய்கறிகளை குரங்குகள் கூட்டம் நாசப்படுத்தி வருவதால் மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்தப் பிரச்சினையை கொரில்லா போல் வேடமிட்டு அங்குள்ள பஞ்சாயத்து ஊழியர்கள் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பத்ராத்திரி கோத்தக்குடேம் மாவட்டத்தில் உள்ளது மொரம்பள்ளி பஞ்சார் கிராமம். இங்கு ஏராளமான அளவில் குரங்குகள் காணப்படுகின்றன.

விவசாயிகளின் பயிர்கள், பழங்களை நாசம் செய்யும் குரங்குகள் கூட்டம் வீடுகளுக்குள்ளும் புகுந்து அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்கின்றன.

மக்களை அச்சுறுத்தி வரும் இந்தக் குரங்குகளின் தொல்லையை ஒழிக்க அங்குள்ள ஊராட்சி நிர்வாகம் புதிய முறை ஒன்றை கையாண்டு வருகிறது.

ஊராட்சியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு என்றே கொரில்லா உடை வாங்கப்பட்டுள்ளது. அவற்றை அணிந்துகொண்டு வரும் ஊழியர்களைப் பார்க்கும் குரங்குக் கூட்டம் பெரிய கொரில்லா வந்துள்ளதாக நினைத்து அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றன.

தினமும் காலை 6 முதல் 8 மணி வரையிலும் மாலை 4 முதல் 6 மணி வரையிலும் கொரில்லா வேடத்தில் ஊழியர்கள் குரங்குகளை விரட்டியடித்து வருகின்றனர்.

இதனால் தற்போது இந்தக் கிராமத்தில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக குரங்குகள் தொல்லை குறைந்துவிட்டதாக கிராம மக்கள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.

மேலதிக செய்திகள்

வடக்கில் கடந்த வருடம் 52 பேர் படுகொலை!

எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் – மொட்டுக் கட்சி சூளுரை.

சிங்கப்பூர்க் கப்பல் மோதி பாலம் ஆற்றில் விழுந்தது : மீட்பு நடவடிக்கை பல நாள்களுக்கு நீடிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.