இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை! – புனரமைப்புப் பணிகள் மும்முரம்.

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், தொழிற்சாலையைப் புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று அறியவருகின்றது.

நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன்போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார்.

இந்தத் தொழிற்சாலையில் கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அறியவருகின்றது.

கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறிமாறி வந்த அரசுகள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை.

இந்தநிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.

“நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது.” – என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை! – புனரமைப்புப் பணிகள் மும்முரம்.

யாழ் கிங்ஸ் அணியிலிருந்து திசர பெரேரா வெளியேறினார்.

யாழ் கிங்ஸ் அணியிலிருந்து திசர பெரேரா வெளியேறினார்.

பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து தீப்பிடித்ததில் 45 பேர் பலி.

ஜப்பானிய சந்தையில் இருந்து 3 வகையான சிவப்பு அரிசிக்கு தடை.

தடை செய்யப்பட்ட பாமாயில் விற்ற சுங்க ஆய்வாளர் சிக்கினார்.

பாடசாலை ஒன்றில் தடுப்பூசி ஒவ்வாமையினால் 10 மாணவர்கள் வைத்தியசாலையில்!

ஒன்பது தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக இடையே நேரடிப்போட்டி

Leave A Reply

Your email address will not be published.