டலஸ் அணியின் நிலை பரிதாபம்! – மேலும் இரு எம்.பிக்கள் சஜித் கூட்டணியில் சங்கமம்?

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் இருக்கும் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணையவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான லலித் எல்லாவள, திலக் ராஜபக்ஷ ஆகிய இருவருமே இவ்வாறு இணையவுள்ளனர் என அறியமுடிகின்றது.

டலஸ் அணியில் உள்ள 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏற்கனவே அறுவர் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்து புரிந்துணர்வு உடன்பாட்டிலும் கைச்சாத்திட்டுள்ளனர். இந்நிலையிலேமே மேலும் இருவர் அப்பக்கம் செல்லவுள்ளனர்.

அதேவேளை, எந்தத் தரப்புடன் இணைவது என்பது தொடர்பில் டலஸ் அழகப்பெரும உட்பட ஏனைய சில உறுப்பினர்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.