தமிழ் மக்களின் நிலத்தை அபகரிக்கும் கிழக்கு தமிழ் அரசியல் !

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற காணி கொள்ளையினால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனக்கு சொந்தமான காணியை அபகரித்த குற்றம் தொடர்பான அனைத்து உண்மைகளையும் ஒலி நாடா மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் வர்த்தகரான , வாகரை , மாண்கார்ணிவெலவில் 14 ஏக்கர் காணி வைத்திருந்த. நிலத்தைப் பார்க்கச் சென்ற போது, ​​முழு நிலமும் சிலரால் அபகரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கிழக்கு ஆளுநரான செந்தில் தொண்டமானின் பிரத்தியேக செயலாளர்கள் என கூறிக்கொள்ளும் இருவரினால் இந்த காணி பலவந்த கையகப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது என்பதை உணர்ந்ததாகவும், அதன் பின்னர் தனது காணி தொடர்பான ஆவணங்கள் மற்றும் பத்திரங்களை அவர்களிடம் காண்பித்ததாகவும் பாதிக்கப்பட்ட வர்த்தகர் கூறுகிறார்.

தங்களுடைய சொந்த நிலத்தை அவர்களிடமிருந்து விடுவிக்க 50 லட்சம் கப்பம் கோருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வாகரை பிரதேச செயலாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, உரிமையை உறுதிப்படுத்துவதற்கான உறுதிப்பத்திரங்களுக்கு மேலதிகமாக பிராந்திய காணி ஆணையாளரிடம் உறுதிப்படுத்தல் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர் பிராந்திய காணி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, பாதிக்கப்பட்டவரின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, காணியை விடுவிக்குமாறு கூறியதோடு, பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்தும், இவர்கள் 50 லட்சம் பணத்தை கப்பமாக கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.