பாலைவனத்தில் வெள்ளம்… துபாய் விமான நிலையமும் வெள்ளத்தில் முடங்கியது! (வீடியோ)

சூறாவளியுடன் பெய்த வழமைக்கு மாறாக பெய்த கனமழை காரணமாக துபாய், பஹ்ரைன், ஓமன் ஆகிய நாடுகளின் பிரதான சர்வதேச விமான நிலையம் உட்பட துபாய் பகுதிகள் நேற்று (16) இரவு வெள்ளத்தில் மூழ்கின.


ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் பாலைவன நாட்டைச் சுற்றி பாரிய வெள்ளம் ஏற்பட்டது. இதனால் துபாய் விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


அப்பகுதிகள் நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து, சர்வதேச பயணிகளுக்கான உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையத்திற்கான விமானங்கள் கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. நேற்றிரவு 7.26 மணியளவில் தற்காலிக விமானச் சேவைகள் நிறுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது.

செவ்வாய்கிழமை மாலை 100க்கும் மேற்பட்ட விமானங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட விமான நிலையம், புயலால் ஏற்பட்ட குழப்பத்திற்கு மத்தியில் செயல்பாடுகளை குறைத்தது. வானிலை சீராகும் வரை செவ்வாய்க்கிழமை மாலை வரும் விமானங்களை தற்காலிகமாக திருப்பிவிட விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் மத்திய கிழக்கின் நிதி மையமான துபாய் முடங்கியது.

Leave A Reply

Your email address will not be published.