விரைவில் கொழும்புக்குள் தனி சைக்கிள் பாதைகள்!

கொழும்பு துறைமுக நகர நுழைவாயிலிலிருந்து பத்தரமுல்ல தியத உயன வரை சைக்கிள் பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தின் நுழைவாயிலிலிருந்து பத்தரமுல்ல தியத்த உயன வரை பல நகரங்களை இணைக்கும் வகையில் இந்த சைக்கிள் பாதை அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி குழந்தைகள், வேலை செய்யும் நபர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களை இலக்காகக் கொண்ட இந்த திட்டத்திற்கான ஆரம்ப திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் மேற்கு மாகாண இயக்குநர் Y.A.G.K. குணதிலக்க தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதும், பிரதான சாலையில் நுழைவதைக் குறைப்பதன் மூலம் சுற்றுச் சூழல் நட்பு போக்குவரத்து முறைகளை மேம்படுத்துவதும் ஆகும்.

இந்த சைக்கிள்கள் பயணிக்கும் சாலையின் நீளம் 23 கி.மீ.ஆவதுடன் , குறைந்தபட்சம் 1.5 மீ மற்றும் அதிகபட்சம் 2.5 மீ. பாதைகள் அமைக்கப்படும்.

இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், மீத்தொட்டமுல்லவில் உள்ள சென்ட் பஸ்டியன் கால்வாய் அருகேயிருந்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள மிதக்கும் கடற்கரை வளாகத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ், இந்த சாலையில் கூலிக்கு சைக்கிள்களை பெற்றுக் கொள்ளக் கூடிய 11 இடங்கள் அமைக்கப்படும். அங்கு நீங்கள் ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுக்கலாம். நீங்கள் விரும்பும் எந்த இடத்திலிருந்தும் ஒரு சைக்கிள் வாங்கி , மேற்குறிப்பிடும் 11 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் பைக்கை திருப்பி விட் செல்லலாம்.

இந்த ஆண்டு இறுதியில் இந்த திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது . 2021 க்குள் இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.