போதைப் பொருளுடன் சிக்கிய முன்னாள் இராணுவ மேஜர்.

அம்பலாங்கொடை பகுதி வீடொன்றில் 26 இலட்சம் ரூபா பெறுமதியான மின்சார உபகரணங்களைத் திருடிய தென்னிலங்கையில் சக்தி வாய்ந்த பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவரை அம்பலாங்கொடை பொலிஸார் 4600 மி.கி. ஹெராயினுடன் கைது செய்துள்ளனர். .

சந்தேக நபர் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பலாங்கொடை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழில் ஒன்றை நடத்துவதற்காக துபாயில் இருந்து நாட்டிற்கு அனுப்பப்பட்ட மின்விளக்குகள், வயர்கள், மின் உபகரணங்கள் போன்றவற்றில் இருந்து 26 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்த சந்தேகநபர் இந்தத் திருட்டைச் செய்துள்ளதாகவும், அவர் வீட்டில் வைத்திருந்த பாஸர் லைட்டை விற்பனை செய்ய முயற்சிப்பதாக தனது நண்பர் மூலம் தகவல் கிடைத்ததாகவும் முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரை விசாரணைக்கு உட்படுத்தியதையடுத்து 6 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேகநபரிடம் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெற்கில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரும் போதைப்பொருள் வியாபாரியுமான இடந்தோட்டையைச் சேர்ந்த அகம்பொடி சஜித் சமன் பிரியந்த (வயது 26) அல்லது சமன் கொல்லா என்பவரது போதைப்பொருள் கடத்தல்களை சந்தேக நபர் செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். .

சந்தேக நபர் ‘சமன் கொல்லாவின் ‘ ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி ஈஷி கேஷ் மற்றும் வங்கிக் கணக்கு இலக்கம் ஊடாக பணத்தைப் பெற்றுள்ளதாகவும் அம்பலாங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேக நபர் தென்னிலங்கையில் இடம்பெற்ற பாதாள உலகக் குழுக்களின் கொலைகளுடன் தொடர்புடையவரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

இந்த சந்தேக நபர் இராணுவத்தில் கடமையாற்றியவர் என்பதால் ஆயுதங்களை பாவிக்கும் பழக்கம் உள்ளவர் எனவும் அதனால் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அம்பலாங்கொட பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.