கொரோனவை விட 100 மடங்கு வேகம் – கேரளாவில் வெடித்த நோய் தோற்று பரவு

கேரளா மாநில ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சலை அதிகளவில் பரவி வருகின்றது.

வெளியான அறிவிப்பின் படி, ஆலப்புழாவின் எடத்வா கிராம பஞ்சாயத்து வார்டு 1 பகுதியிலும், செருத்தன கிராம பஞ்சாயத்து வார்டு 3 பகுதியிலும் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சில அறிகுறிகளை கொண்ட வாத்துகளின் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட பின்னர் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பறவைக் காய்ச்சல் அதாவது H5N1 இருப்பதாக உறுதியானதாக அம்மாவட்ட நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாதிப்பு உண்டான பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள நாட்டுப் பறவைகளைக் அழிக்கும் முறையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் விலங்குகள் நலத் துறையால் விரைவில் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கிறார்கள்.

இந்த நோய் பாதிப்பு மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என்பதால் தேவையில்லாமல் மக்கள் பீதி அடைய தேவையில்லை என ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அண்மையில், பறவைக் காய்ச்சலின் மிக விரைவான பரவல் குறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள் இது அதிக இறப்பு விகிதத்திற்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டு, கோவிட் தொற்றுநோயை விட 100 மடங்கு மோசமானது என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலதிக செய்திகள்

டயலாக் உடன் இணைந்த ஏர்டெல்!

அதிக விலைக்கு வடையும் பிளேன் டீயும் விற்பனை செய்தவரும் கைது

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் விசாபெறும் நடைமுறை மாற்றம்

தமிழ்நாடு உட்பட 102 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல் – வாக்களிக்க மறவாதீர்!!

Leave A Reply

Your email address will not be published.