பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இராணுவச் சிப்பாய் பொலிஸாரால் கைது.

பாணந்துறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸில் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குப் பிரயாணம் செய்த பல்கலைக்கழக மாணவி ஒருவருக்குப் பாலியல் சேஷ்டை புரிந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் சியம்பலாண்டுவ, புத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இராணுவச் சிப்பாயே சியம்பலாண்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரவீந்திர ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் பெண் பொலிஸ் அதிகாரி சமன்மாலி தலைமையிலான பெண் பொலிஸ் குழுவினர் பயணித்த பஸ்ஸை இடையில் நிறுத்தி சந்தேகநபரான இராணுவச் சிப்பாயைக் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.