இலங்கையில் ஸ்ரீ ராமாயண பாதைகள் திட்டம்

இந்திய-இலங்கை சமய மற்றும் கலாச்சார இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், உலகின் அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா முறையுடன், கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஸ்ரீ ராமாயண பாதைகள் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

இந்தியாவின் அயோத்தியில் உள்ள மிகப் பெரிய ஸ்ரீ ராம மந்திரின் தலைமைப் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் சுவாமியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகரும், ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

“ஸ்ரீ ராமாயணப் பாதை” யாத்திரைத் திட்டம் இலங்கை முழுவதும் புனித யாத்திரை மற்றும் பயணத்திற்காக ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது முக்கிய இடங்களை ஊக்குவிக்கும் மற்றும் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஆர்வமுள்ள மில்லியன் கணக்கான இந்திய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கும்.

 

மேலதிக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடியாக பொங்கிய ஈரான்

அதிக வாக்குகள் பதிவான தொகுதிகள்: முதலிடத்தில் ஸ்ரீபெரும்புதூர்

இஸ்‌ரேலிய ஆளில்லா வானூர்தியைச் சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா.

ஐடி நிறுவனங்களில் 65,000 ஊழியர்கள் பணி நீக்கம் – அதிர்ச்சி ரிப்போர்ட்

பிரதமரின் சர்ச்சை பேச்சு: மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

வறண்டது வீராணம் ஏரி

மைத்திரி ராஜினாமா..

Leave A Reply

Your email address will not be published.