தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமானால் அது நாட்டின் நன்மைக்கு வழிவகுக்கும் : கபீர் ஹசிம்

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமானால் அது நாட்டின் நன்மைக்கு வழிவகுக்கும் என SJB பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.

ஆனால் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள், ஒரு பொது நோக்கத்திற்காக இணங்குமா என்ற சந்தேகம் எழுவதாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய அபிலாஷைகளுக்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மே மாதம் அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அழைப்பு குறித்து உத்தியோகபூர்வ கருத்தை கட்சித் தலைவர்களின் உள்ளக கலந்துரையாடலின் பின்னரே தெரிவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடு இன்று கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும், நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் இன்னும் ஐந்து வருடங்கள் தாக்குப்பிடிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய போது, தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் சாத்தியம் இருந்ததாகவும், ஆனால் பல காரணிகளால் அச் சந்தர்ப்பம் தவறிப்போனதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலதிக செய்திகள்

கோர விபத்தில் உயிரியல் பாட ஆசிரியர் பரிதாபச் சாவு!

இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ள அனுரகுமார.

தேர்தலுக்குச் சென்றால் பொருளாதாரம் குலைந்து போகும்..- மத்திய வங்கி.

ஓடிடி மற்றும் சாட்டிலைட் பிசினஸ் வீழ்ச்சி.

பிரசாரத்திலிருந்து ஒதுங்கிய குஷ்பு : கடுப்பாகியுள்ள அண்ணாமலை தரப்பு!

கர்நாடகாவை அதிரவைத்துள்ள பா.ஜ.க கூட்டணி வேட்பாளரின் காமலீலைகள்: வைரலான வீடியோக்களால் பின்னடைவு?

விசா பகுதி செயலிழந்தது சதியாலா? அரசு விசாரணை.

இஸ்ரேலுடனான வர்த்தகத்தை நிறுத்தியது துருக்கி!

மும்பை அணிக்கெதிரான போட்டியில் கல்கட்டா அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு

நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலாவின் தற்கொலை வழக்கு : காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

Leave A Reply

Your email address will not be published.