சந்திரிகாவின் தாக்குதலால் நிலைகுலைந்த மைத்திரி அணி.. காசுக்கு கட்சி ஒன்றைத் தேடும் நிலை.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்றை பணம் கொடுத்து வாங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி குழு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நிலவும் சட்ட தடைகள் காரணமாக மைத்திரி குழு எதிர்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான முயற்சியே இது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவின் பேரில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் ஜனாதிபதியாக விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை நீதிமன்றம் கண்டித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் நிமல் சிறிபாலட சில்வாவின் அணி தற்போது முழு அதிகாரத்தைப் பெற்றுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க குழு ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.