அன்னூரில் ரூ.1.50 கோடி திருட்டு? குற்றவாளி கைதான பிறகு தெரியவந்த உண்மை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் சொக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்.

பா.ஜ.க பிரமுகரான இவரது வீட்டில் நேற்றைய முன்தினம்(மே 18) வீட்டில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 1.5 கோடி பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்க பட்டதாக விஜயகுமார் அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தபட்டது

விசாரணையில் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அங்கு சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் வந்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நபர் குறித்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி கருமத்தம்பட்டி அருகே காளிபாளையம் பகுதியில் அந்த நபர் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவனை கைது செய்த காவல் துறையினர் அன்னூர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன்(33) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபர் தான் விஜயகுமார் வீட்டினை நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் அன்பரசனிடம் இருந்து விஜயகுமார் வீட்டில் பூட்டை உடைத்து அவரை வீட்டில் இருந்த ரூ.18.50 லட்சம் மற்றும் ஒன்பது சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தது உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும் விஜயகுமார் தனது வீட்டில் ரூ. 1.50 கோடி திருடபட்டதாக கூறியதால் அவரிடம் மீண்டும் விசாரனை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் விஜயகுமார் விரைவாக குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு அழுத்தம் தர வேண்டி பொய்யான தகவல்களை கூறியது தெரியவந்தது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: ஏக்நாத் ஷிண்டே
இதனையடுத்து குற்றவாளியிடம் இருந்து ரூ.18.50 லட்சம் ரொக்கம் மற்றும் ஒன்பது சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அன்பரசன் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

அன்பரசன் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் பொய்யான தகவல்களை கூறி காவல் துறையினரை அலைக்கழித்தாக பா.ஜ.க பிரமுகர் விஜியகுமார் மீது நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக கூறிய மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் அன்னூரில் பேட்டியளித்தார்.

மேலும், காவல்துறை அதிகாரிகளிடம் உண்மையை மட்டும் தெரிவித்தால்தான் விசாரணையை துரிதப்படுத்த முடியும். தவறான தகவல்களை கூறினால் அது விசாரணையை பாதிக்கும் இதுமாதிரி யாரும் இனி சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்

மேலும் திருட்டு சம்பவம் நடைபெற்று 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி மற்றும் அவர்களுடன் இணைந்து செயல்பட்ட 10 தனிப்படை காவல் துறையினரை நேரில் அழைத்து மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

மேலதிக செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி: மீட்புப் பணியில் சிக்கல் (Video)

SJBயுடன் விவாதங்களுக்கு வர முடியாது என NPP அறிவித்தது

வழக்காளியுடன் சுமுகத் தீர்வுக்கு இணக்கப் பேச்சு நடத்துங்கள்! – தமிழரசின் மத்திய குழு வழிகாட்டல்.

ஆளும் – எதிரணி எம்.பிக்கள் பலர் விரைவில் ஐ.தே.கவுடன் இணைவு?

மும்முனை விவாதமே வேண்டும்! – டிலான் வலியுறுத்து.

தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டம்: தமிழரசுக் கட்சி இணங்கவில்லை! – மத்திய குழு வேறு விதமாக முடிவு.

ஆம் ஆத்மி தலைவர் கைது நடவடிக்கையைக் கண்டித்து டெல்லியில் பரபரப்பு; ஊரடங்கு அமல்.

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான துபாய் ஊடக விசாரணையில் சிங்கப்பூர் சந்தேக நபர்களின் பெயர்கள்.

ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து?

ஈரான் அதிபர் ரைசி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்து மிகுந்த கவலை அளிக்கிறது: மோடி

சாலையில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு; குழந்தை உட்பட 5 பேர் படுகாயம் – பரபர சம்பவம்!

படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை; விவசாயிகளின் கடன் தள்ளுபடி – ராகுல் காந்தி உறுதி!

பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.

ஜூன் இல்லை ஜூலை தான் வரும் – மகளிர் உரிமை தொகை குறித்த முக்கிய தகவல்!

Leave A Reply

Your email address will not be published.