நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பு.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 10-வது ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனும், துணை கேப்டனும் மோதுவதால் ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்புகள் உள்ளன.

அந்த அணியில் சௌரப் திவாரி முழு உடற்தகுதியுடன் இல்லாததால் அவருக்குப் பதில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜோஷ் பிலிப்பி, டேல் ஸ்டெயின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதில் அடம் ஸாம்பா, இசுரு உதானா, குர்கீரத் மான் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.