60 ஆண்டுகள்; மின்சாரம், குடிநீர் வசதி இல்லாத கிராமம் – தற்கொலை தான் வழி… கண்ணீரில் மக்கள்!

மின்சாரம், குடிநீர் வசதி இல்லாமல் வாழும் கிராம மக்கள் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடகடல் கிராமம் கீழத்தெரு காலனியில் வசிப்பவர் ராஜமாணிக்கம் (60). கூலி தொழிலாளியான இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன்கள் ராஜீவ் காந்தி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறவினர்கள் மதியழகன், இளையபெருமாள், மகேந்திரன், மணிகண்டன் ஆகிய 6 ஆறு பேரும் ராஜமாணிக்கம் வீட்டின் அருகருகில் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இங்கு மொத்தம் 7 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், ராஜமாணிக்கத்தின் உறவினரான அண்ணாமலை மகன்கள் அழகானந்தம், ரெங்கராஜ் ஆகியோருக்கும்

ராஜமாணிக்கத்திற்கும் இடையே வெகு நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அழகானந்தம் மற்றும் ரெங்கராஜ் ஆகிய இருவரும் ராஜமாணிக்கம் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்தினருக்கு மின் இணைப்பு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க கூடாது என பிரச்சனை செய்து

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இந்த சூழலில், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி கேட்டு பலமுறை போராடியும் எந்தப் பயனும் கிடைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான ராஜமாணிக்கத்தின் மகன் ராஜீவ் காந்தி(45) உடல் நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார்.

இவருடைய இழப்பில் இருந்து குடும்பம் மீளாமல் தவித்து இருந்தது.இவர்களது வீட்டில் குடிநீர் இணைப்பும் இல்லை, மின்சார வசதியும் இல்லாமல் தினந்தோறும் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் அலைந்து தண்ணீர் எடுத்து வரவேண்டும் அதேபோல மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் கொசுக்கடியிலும்,

விஷ பூச்சிகள் கடிப்பதாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்சாரத் துறைக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

எனவே தமிழக அரசு தலையிட்டு, குடிநீர் மற்றும் மின்சார வசதி கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் குடும்பத்தோடு அனைவரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.