மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்றவர் யானை தாக்கிப் பலி!

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அனுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லன்கல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது.

நேரியகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தார் என்று மதவாச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தனது மனைவியுடன் வயலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும்போது காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

சம்பவத்தின்போது இவரது மனைவி எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பினார் என்றும் பொலிஸார் கூறினர்.

உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.