காலதாமதமான முதியோர் கொடுப்பனவு இம்மாதம் இரண்டாவது வாரத்தில் ….

தொழிநுட்ப கோளாறு காரணமாக காலதாமதமான முதியோர் கொடுப்பனவு இம்மாதம் இரண்டாவது வாரத்தின் பின்னர் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மே மாதம் இந்த கொடுப்பனவை செலுத்துவதற்காக மாவட்ட செயலகங்களுக்கு 1518 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்திற்கான கொடுப்பனவும் , இம்மாதம் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

முதியோர் உதவித்தொகையை பாதுகாப்புக் கட்டண முறையின் கீழ் உரிய வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே நிவாரணம் பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முதியோர் உதவித்தொகைக்கு உரிமையுடையவர்களாவர்.

Leave A Reply

Your email address will not be published.