ரயில் தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி கைது (Video)

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் புகையிரத பாதையில் பேருந்தை செலுத்திய சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்த சாரதி பேருந்தை ரயில்வே தண்டவாளத்தில் இறக்கிவிட்டு, ரயில் பாதையில் பேருந்தை ஓட்டிச் செல்லும் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் அதிக முக்கியத்துவத்துடன் பகிரப்பட்டது.

குறித்த சாரதி இன்று களனிவெளி புகையிரத பாதையில் புவக்பிட்டிய பிரதேசத்தில் தனது பேருந்தை எவ்வாறு ஓட்டிச் செல்கிறார் என்பது அந்தக் காட்சியில் காண்பிக்கப்பட்டது.

சந்தேகத்திற்குரிய பஸ் சாரதியுடன் சம்பந்தப்பட்ட பஸ்ஸும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.