மாமாவை வாளால் வெட்டிக் கொலை செய்த மருமகன்!

புத்தளம் – மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை வாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார் என்று மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர என்ற 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரியின் மகனே இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்றும், சந்தேகநபரும் இறந்தவரின் வீட்டுக்கு அருகில் வசித்து வருகின்றார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பழைய தகராறு காரணமாக மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் மாமனாரை மருமகன் வாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.