முகத்துவாரம் கடற்கரையில் ஊடகவியலாளர் ஒருவரின் சடலம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் நிகழ்ச்சிப் பிரிவில் தயாரிப்பாளராகப் பணியாற்றிய இந்துனில் ஜயவர்தனவின் சடலம் இன்று (05) கொழும்பு , முகத்துவாரம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முகத்துவாரம் கடற்கரையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் பல நாட்களாக காணாமல் போயுள்ளதாக பிலியந்தலை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்துனில் ஜயவர்தன இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் வெளி விரிவுரையாளராக பணியாற்றியதோடு, லக்பிம, ஸ்வர்ணவாஹினி போன்ற பல தனியார் ஊடகங்களிலும் பணியாற்றியுள்ளார்.

மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.