இந்தியாவின் பிரதமராக சனிக்கிழமை மீண்டும் மோடி பதவியேற்பார்.

இந்தியாவின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்கும் சடங்கு எதிர்வரும் சனிக்கிழமை (8 ஜூன்) இடம்பெறக்கூடும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று முறை பிரதமராக ஒருவர் பதவியேற்கவிருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.

அதே நாள், புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, மோடி தமது பதவி விலகல் கடிதத்தையும் தமது அமைச்சரவையின் பதவி விலகல் கடிதங்களையும் அதிபர் முர்முவிடம் சமர்ப்பித்தார்.

புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை நரேந்திர மோடியை இடைக்காலப் பிரதமராகத் தொடருமாறு அதிபர் முர்மு கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.