அரசியல் தீர்வுகளைத் தேடும் இந்த நாட்டு மக்கள் பொருளாதாரத் தீர்வுகள் குறித்து அக்கறையில்லை மன்னாரில் இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.

அரசியல் தீர்வுகளைத் தேடும் இந்நாட்டு மக்கள் பொருளாதாரத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மன்னாரில் நேற்று நடைபெற்ற இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

‘சுபீட்சமான எதிர்காலத்திற்கான பயணம்’ என்ற பெயரில் இளைஞர் அமைப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு வடக்கு மாகாண கல்வி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது இளைஞர் மத்தியில் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த ஜனாதிபதி, அவர்களின் கேள்விகளுக்கும் சாதகமான பதில்களை வழங்கினார்.

கொவிட் – பொருளாதார நெருக்கடியின் காரணமாக 4 வருடங்களாக தொழில்களை வழங்க முடியாமற்போனதோடு, தொழில் கிடைத்த பலரும் அவற்றை இழந்து நிற்கும் நிலைமையும் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அதனால் புதிய பாதையில் சென்று தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டுமா, இல்லாவிட்டால் பழைய முறையில் சென்று வீழ்ச்சியடைவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதனையடுத்து மன்னார் மாவட்ட வர்த்தர்களுடன் நேற்ற இடம்பெற்ற சந்திப்பில், அரசு முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிப் பயணிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் பெருமளவான முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகைத் தருவர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

காலத்துக்குக் காலம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல், சரியான பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ச்சியாகப் பின்பற்றினால் நாடு முன்னேற்றமடையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்காகவே பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தைச் சமர்பித்திருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதனை எந்தவொரு அரசும் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்.

நீண்டகாலமாக அரசியல் ரீதியான தீர்வைத் தேடும் இந்நாட்டு மக்கள், ஒருபோதும் பொருளாதாரத்தின் பக்கமாக தீர்வைத் தேடவில்லை என்றும், சரியான பொருளாதாரக் கொள்கையின் ஊடாக மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சரிவடைந்திருந்த பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் கட்டியெழுப்ப தன்னால் முடிந்ததெனத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரம் வலுவடையும்போது, அதன் பலன்கள் சகல தரப்பினருக்கும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பரந்தளவான அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண ஆளுநர். பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்டவர்களும் அரசியல் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மேலதிக செய்திகள்

👉 தேங்காய் வீழ்ந்து பெண் குழந்தை பரிதாப மரணம்!
👉 தெற்கு அரசியலில் வெகுவிரைவில் ஏட்டிக்குப் போட்டியாகக் கட்சி தாவல்.
👉 மேற்கு வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் 5 பேர் உயிரிழப்பு…!
👉 தெலுங்கு தேசம் கட்சி தலைவராக சீனிவாச ராவ் யாதவ் நியமனம்!
👉 மாட்டு கறி இருந்த 11 பேரின் வீடுகள் இடித்து சேதம் – அதிர்ச்சி சம்பவம்!
👉 நீட் நுழைவுத் தேர்வில் விதவிதமாக மோசடி…அதிர்ச்சி தகவல்கள்!
👉 ஊடகவியலாளரின் வீடு மீதான தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள்! – பொலிஸார் அசமந்தப்போக்கு என்றும் சிறீதரன் குற்றச்சாட்டு.
👉 சஜித்துக்கு எதிராக ரணிலும் அநுரவும் சேர்ந்து கூட்டுச் சதி! – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு.
👉 இலங்கை வரும் ஜெய்சங்கர் சம்பந்தனுடன் முக்கிய பேச்சு!
👉 மகாராஜா கெமுனுவின் கனடா பாய்ச்சல் நாடகம் வெலிக்கடையில் ..
👉 15 SJB பா.ஊக்கள் ரணிலுடன் இணைய கபீர் ஹசிம் வீட்டில் பேச்சுவார்த்தை…
👉 எங்களிடம் இதுவரை வேலைத்திட்டம் ஒன்று இல்லை.. தேர்தலை அறிவித்த பின் சொல்கிறேன்..- அனுர

Leave A Reply

Your email address will not be published.