ஈஸ்டர் தாக்குதலில் கிடைத்த ஏராளமான உதவித் தொகையை பேராயர் அமுக்கிவிட்டார் – மைத்திரி கடும் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றம் சுமத்தும் பேராயர் மெல்கம் ரஞ்சித் , அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தொண்டுயாளர்கள் வழங்கிய உதவிகளை இதுவரை விநியோகிக்கவில்லை என முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

‘400 வழக்குகள் இருப்பதால் கின்னஸ் புத்தகத்துக்குப் போயிருக்கிறேன். கர்தினாலின் தலைமையில் 400 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இறந்தவர்களுக்கு ஒரு வழக்கு, கை கால் உடைந்தவர்களுக்கு ஒரு வழக்கு… இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் நான் ஜனாதிபதியாக இருந்தபோது, ​​அவர்கள் அனைவருக்கும் தெளிவாக இழப்பீடு வழங்கினேன்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு கத்தோலிக்க அமைப்புகள், உலக நாடுகள், பல்வேறு அமைப்புகள், இலங்கையில் உள்ள உயர்மட்ட வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கர்தினாலுக்கு பணம் கொடுத்தனர். கர்தினால் அவர்களிடம் கொடுத்த பணத்திற்கு என்ன நடந்தது… ஒரு பட்டியலை தயவு செய்து முன்வைத்தால் நல்லது. இதோ நான் பெற்ற பணம்…அதே போல் கொடுத்த கணக்கு காட்ட வேண்டும். கிடைத்த பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. நான் அரசாங்கம் மூலம் பணம் செலுத்திய போதிலும், என்னிடம் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் என மைத்திரி கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.