யாழில் மனைவியை எரித்து கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை.

யாழ்ப்பாணம் மானிப்பாய் காக்கை தீவு பகுதியில் மனைவியை எரித்து கொலை செய்த கணவனுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (20) தண்டனை விதித்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் திகதி குடும்பத் தகராறு காரணமாக கணவன் , மனைவியைத் தீயிட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் பின்னர், பொலிஸார் கணவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதுடன், சந்தேகநபர் இரண்டு வருட சிறைவாசத்தின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. முல்லையில் மூன்று வருட விசாரணையின் பின்னர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமகுமார் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தார்.

Leave A Reply

Your email address will not be published.