நோயாளர் நலன் சேவையில் ஒருபடி மேற்செல்லும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை.

நோயாளர் நலன் சேவையில் ஒருபடி மேற்செல்லும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை.
வைத்தியசாலையில் புதிதாக சில வைத்திய நிபுணர்கள் தமது கடமைகளை பொறுபேற்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கொவிட் 19 காலப்பதியில் மக்களுக்கான சிறந்த சேவையினை வழங்கியிருந்த நிலையில் அங்கு வைத்தியர்கள் பற்றாக்குறை தற்போதும் காணப்பட்ட நிலையில் உள்ளது.
குறிப்பாக சுமார் 50 வீதமான வைத்தியர்கள் இன்னமும் தேவையான நிலையில் உள்ளனர். மாவட்ட வைத்தியசாலை ஒன்றில் இவ்வாறு வைத்தியர்கள் பற்றாக்குறை இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை.
இந்த நிலையில் தற்போது மாவட்ட பொது வைத்தியசாலையில் மேலும் சில முக்கிய வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்பட்டு கிளினிக் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதானது கிளிநொச்சி வாழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாகும். அதனடிப்படையில் புதிதாக இருதய சிகிச்சை நிபுணர்
(Cardiologist), புற்றுநோய் மருத்துவ நிபுணர் (Oncologist), மூட்டுவாத மருத்துவ நிபுணர்(Rheumatologist), மற்றும்  அகஞ்சுரப்பி மருத்துவ நிபுணர்(Endocrinologist) ஆகியோர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். இதன்மூலம் நோயாளர்கள் பலதுறை சார்ந்த வைத்திய நிபுணர்களின் கூட்டான சிகிச்சைமுறைகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன் விரைவாக குணமடைந்து வீடு செல்லமுடியும். மேலும், மேற்கூறிய வைத்திய நிபுணர்களின் சேவை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலேயே கிடைக்கப்பெற்றிருப்பது யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் இதர வைத்தியசாலைகளுக்கு சேவைநாடிச் செல்ல வேண்டியதால் நோயாளர் எதிர்நோக்கிய அசெளகரியங்கள் தவிர்க்கப்படமுடியும். இது கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு மகிழ்சியான ஒரு தகவலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.