மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக மருத்துவர் அர்ச்சுணா நியமிக்கப்படுவார்-அமைச்சர் டக்லஸ்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நீண்டகாலமாக பல பிரச்சினைகள் இருந்துள்ளன என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்தார்.

அங்கு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றும் இருந்தும் கூட 14 வருடங்கள் சரிவர அந்த வளங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளன.

இந்தநிலையில், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின்(Dr.Archchuna) ஊடாக இவை வெளிக்கொண்டு வரப்பட்டபோது பொதுமக்கள் தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், விசாரணைகள் முடிந்து வைத்தியர் அர்ச்சுனா மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் கடமையை பொறுப்பேற்பார் என்பது தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.