ஏ. சி கலிலுர் ரஹ்மான் ஊடகத்துறையில் ஈடு செய்ய முடியாத பெரும் பேரிழப்பு.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தின் தமிழ் செய்தி வாசிப்பாளரும் துறை முறை அதிகார சபையின் உத்தியோகஸ்தருமான ஏ. சி கலிலுர் ரஹ்மான் அவர்களின் மரணம் தமிழ் ஊடகத்துறையில் ஈடு செய்ய முடியாத பெரும் பேரிழப்பாகும் என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள தமது அனுதாபச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்
நல்ல குரல் வளமும் தெளிவான உச்சரிப்பும் கொண்ட அவர் ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தில் தமிழ் செய்தி வாசிக்கும் விடயத்தில் தனக்கொரு அலாதியான சிறப்பினைக் கொண்டிருந்தார்.
அந்நாரது இழப்பு இலத்திரனியல் ஊடகத்துறைக்கு பெரும் பேரிழப்பாகும். இந்நாரை இழந்து தவிக்கும் அவரது மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் என்னுடைய உள்ளம் நிறைந்த ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

– இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.