வவுனியாப் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் விசேட அறிவித்தல்!

வவுனியாப் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம்
விசேட அறிவித்தல்!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வவுனியாப் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விசேட அறிவித்தலை வழங்கி வருகின்றார்கள்.

கம்பஹா ஆடைத் தொழில்சாலையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய நிலையில் வவுனியாவிலும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கொரோனாத் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் சுகாதார நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பேணுமாறு வவுனியாப் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

அத்துடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளானோருடன் தனிமைப்படுத்தல் காலத்திர் நேரடித் தொடர்புகளைப் பேண வேண்டாம் எனவும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும், சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்துவதுடன் மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.