யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்கள் வீடுகளுக்கு.

யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி
ஆசிரிய மாணவர்கள் வீடுகளுக்கு.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 ஆசிரிய மாணவர்கள்  அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் இராச வீதியில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரி மாணவர் விடுதி தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டுள்ளதால் காரணமாக மாணவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரியவர்கள் தனித்தனியான பஸ்களில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை  கல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

சுமார் 8 பஸ்களில் 71 ஆண் ஆசிரிய மாணவர்களும், 304 பெண் ஆசிரிய மாணவர்களும் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.