வடக்கு தைவானின் மேல் வானில் சீன பலூன்.
வடக்கு தைவானின் மேல் வானில் சீன பலூன் ஒன்று காணப்பட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதாகவும், 6 மாதங்களுக்கு பின்னர் அவ்வாறானதொரு நிகழ்வு பதிவாகியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது போன்ற அடையாளம் காண முடியாத பலூன்களை சீனாவின் தொல்லையாக பார்க்கும் தைவான், தனது எல்லையை மீறிய செயலாக இதனை அறிமுகம் செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிப்படையாகப் போரிடாமல் முறைசாரா யுக்திகளைப் பயன்படுத்தி எதிரியை சோர்வடையச் செய்ய சீனா இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டும் தைவான், அதன் நடவடிக்கைகளில் ஒன்றாக தனது நாட்டை நோக்கி பலூன் விமானத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தைவானில் கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் தைவான் வானில் இவ்வாறான பலூன்கள் அதிகளவில் காணப்பட்டதாகவும், கடந்த ஏப்ரல் மாதம் அவ்வாறான பலூன்கள் கடைசியாக காணப்பட்டதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு தைவான் வானில் 60 கடல் மைல் தொலைவில் இரண்டு மணி நேரம் பறந்ததாகக் கூறப்படும் பலூன் பின்னர் காணாமல் போனதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.