ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை அமைப்பாளர் லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்!

முன்னாள் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
அவர் நேற்று (13) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் நேற்று முன்தினம் (12) கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அதில் லக்ஷ்மன் விஜேமான்ன களுத்துறை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். ராஜித சேனாரத்ன ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். லக்ஷ்மன் விஜேமான்ன கட்சி தலைவர் முன்னிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமும், ரணில் விக்கிரமசிங்க அந்த எதிர்ப்பை கேட்காமல் அவரை அங்கிருந்து உடனடியாக வெளியேறச் சொன்ன விதமும் ஊடகங்களில் வெளியானது.