வவுனியா விபத்தில் இளைஞர் படுகாயம்.

விபத்தில் இளைஞர் படுகாயம் 

வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில்  ஹன்ரர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

வவுனியா வைரவர் கோவில் வீதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த ஹன்ரர் ரக வாகனம் வைரவர் கோவில் வீதி, முதலாம் ஒழுங்கைக்குத் திரும்ப முற்பட்ட வேளையில் அப்பாதையூடாக வந்த மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் மோதுண்டு, வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியான 22 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave A Reply

Your email address will not be published.