ஜனாதிபதியின் புத்தாண்டு கொண்டாட்ட நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு ரத்து!

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டன்று , ஜனாதிபதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் புத்தாண்டு சடங்குகளை நிறைவேற்றும் காட்சி தொலைக்காட்சி சேனல்களில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
இருப்பினும், இந்த ஆண்டு ஜனாதிபதி புத்தாண்டு சடங்குகளை நிறைவேற்றும் காட்சி தொலைக்காட்சி சேனல்களில் நேரலையில் ஒளிபரப்பப்படாது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முடிவு செய்துள்ளதாக , அவரது தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு புத்தாண்டு சடங்குகளை அதிக ஆரவாரமின்றி, மிகவும் எளிமையாக குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து நடத்தவும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.