வெளி மாவட்ட வியாபாரிகள் மற்றும் வாகனப் பதிவும் கிருமிநாசினி தெளித்தலும்.

அம்பாறை சம்மாந்துறை பிரதேச எல்லைக்குள் உள் நுழையும் வெளிப் பிரதேச வியாபாரிகள் அவர்களது வாகனங்களையும் பதிவு செய்வதோடு, தொற்று நீக்கி கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை கொரோனா வைரஸ் தடுப்பு வழிநடாத்தல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாகவே, பிரதேச சபை, பிரதேச செயலகம், பொலிஸ், சம்மாந்துறை வர்த்தக சம்மேளனம் மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையின் கீழ் பிரதேசத்துக்குள் உள்நுளையும் வெளிப் பிரதேச வியாபாரிகள் அவர்களது வாகனங்கள் பதிவு செய்வதுடன், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்து தொற்று நீக்கி கிருமிநாசினிகளை தெளித்து சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என உறுதிப்படுத்தி, திகதியிட்ட வியாபார அனுமதி அட்டை ஒன்றினை வழங்கியும் வருகின்றனர்.

இந்த நடவடிக்கை இன்று திங்கட்கிழமை முதல் சம்மாந்துறை பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளான நெல்லுப்பிடிச் சந்தி , வங்களாவடி , வீரமுனைச் சந்தி மற்றும் பள்ளாற்று சந்தி ஆகிய 4 இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 

Leave A Reply

Your email address will not be published.