கல்பிட்டி பகுதியில் 07 பேருக்கு கொரோனா ..

கல்பிட்டி மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் கந்தக்காடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டதாக கல்பிட்டி சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

பேலியகொடை பொது மீன் சந்தை வளாகத்திற்கு மீன்களை கொண்டு சென்ற மீனவர்களின் சிலரே கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் நாற்பத்திரண்டு பேர் கல்பிட்டி அடிப்படை மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி பரிசோதனை செய்து கொண்டதில் கல்பிட்டியை சேர்ந்த 4 பேருக்கும் , குறிஞ்சாம்பிட்டியைச் சேர்ந்த 2 பேருக்கும் , மாம்புரியை சேர்ந்த ஒருவருக்கும் , கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கந்தக்காடு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.